ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்தது அரசின் கொள்கை முடிவு - தமிழக அரசு

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்தது அரசின் கொள்கை முடிவு என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.

Update: 2023-08-07 11:33 GMT

கோப்புப்படம்

சென்னை,

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், பொது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுத்துவதால் தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்தது அரசின் கொள்கை முடிவு என்று தெரிவிக்கப்பட்டது.

ரம்மியை நேரில் விளையாடும்போது தான் திறமைக்கான விளையாட்டாக கருத முடியும். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. ஆன்லைனில் விளையாடுவோரின் சுய அறிவிப்பு (Profile) எப்படி சரிபார்க்கப்படுகிறது என்று விளக்கப்படவில்லை என்று தமிழக அரசு வாதிட்டது.

மேலும், ஆன்லைன் விளையாட்டில் வென்ற பணம் முழுவதையும் பெற முடியாது. ஒரு பகுதி ஆன்லைன் நிறுவனத்துக்கு செல்கிறது. நேரடியாக விளையாடும்போது முழு பணமும் கையில் கிடைக்கும் என்று கூறியது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்குகள் ஆகஸ்ட் 14-ம்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்