பட்டமளிப்பு விழாவிற்கு எல்.முருகனை கவர்னர் அழைத்தது அரசியல் சார்பான முடிவு - மதுரை காமராஜர் பல்கலை. பாதுகாப்பு குழு
பட்டமளிப்பு விழாவிற்கு எல்.முருகனை கவர்னர் அழைத்தது அரசியல் சார்பான முடிவு என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு குழு கூறியுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை, கவர்னர் அழைத்தது முற்றிலும் அரசியல் சார்பான முடிவு என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கல்வி அமைச்சருக்கு உரிய மரியாதை தரப்படாமல் பட்டமளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புக்குழு கூறியுள்ளது.
மேலும், பட்டமளிப்பு விழாவில் தனியாக சிறப்பு விருந்தினர் என்று அழைப்பது வழக்கம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. வழக்கங்களை மீறி பல்கலைக்கழக ஆட்சிக்குழுவுக்கு தகவல் தராமல் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை கவர்னர் அழைப்பது என்பதும் கவர்னர் சொன்னபடியெல்லாம் துணை வேந்தர் கேட்பது என்பதும் தமிழகத்தில் உயர்கல்வி பரப்பில் பிற்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு இதுகுறித்து கடுமையான எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக்குழு கூறியுள்ளது.