அரசு பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம்

அரசு பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.;

Update:2023-02-24 00:12 IST

கந்தர்வகோட்டை அருகே குளத்தூர் நாயக்கர்பட்டி கிராமத்தில் இருந்து பள்ளி மாணவிகள் ஏராளமானோர் தஞ்சை மாவட்டம், மருங்குளம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் வழக்கம் போல் மாணவிகள் அரசு பஸ்சில் பயணம் செய்தனர். அப்போது படியில் நின்றவாறு பயணம் செய்த மாணவிகளை பஸ் கண்டக்டர் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவிகள் நாயக்கர்பட்டியில் பஸ் வந்தவுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையே இந்த பிரச்சினை தொடர்பாக புதுக்கோட்டை மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து கண்டக்டர் சுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும் பணியிடை நீக்க காலம் முடிந்ததும் அவர் பணியிட மாற்றம் செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்