அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் ஆலமரத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 48). சத்தியமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த ஒரு லாரி மோட்டார்சைக்கிளில் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மணி படுகாயம் அடைந்து இறந்துவிட்டார். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.