ஜி.பி.பார்மசி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஜி.பி.பார்மசி கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;

Update:2023-09-30 00:40 IST

ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடியில் உள்ள ஜி.பி.பார்மசி கல்லூரியில் சிறப்பு பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரியின் நிறுவனர் மற்றும் தாளாளர் ஜி.பொன்னுசாமி தலைமை தாங்கினார். ஈஸ்வரி கல்வி அறக்கட்டளை தலைவர் ஈஸ்வரி பொன்னுசாமி, இயக்குனர்கள் டாக்டர் லலிதாலட்சுமி பிரபாகர், அகிலா யுவராஜன், டாக்டர் சுஜாதா செந்தில்குமார், கல்லூரி முதல்வர் டாக்டர் தீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்குனர் டாக்டர் பொன்பிரபாகர் வரவேற்றுபேசினார்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி அரங்க.வேலு கலந்துகொண்டு 60 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டி.கே.ராஜா, நடராஜன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கிருபாகரன், நிர்மலாராஜா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குட்டிமணி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்