மீன் குட்டை அமைக்க மானியம்- செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-;

Update:2022-05-23 17:38 IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2021-2022-ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி மட்சய சம்படா யோஜனா திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்போரை ஊக்குவித்திடும் விதமாக ஒரு அலகு உயிர் கூழ்ம திரள் (பயோபிளாக்) குளம் அமைக்க மற்றும் உள்ளீட்டுக்கு ஆகும் மொத்த செலவினம் ரூ.18 லட்சத்தில் பொதுப்பிரிவினருக்கு 40 விழுக்காடு மானியம் வழங்கப்படும்.

எனவே இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் காஞ்சீபுரம் நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், எண்: 1/269, கிழக்கு கடற்கரை சாலை, சின்ன நீலாங்கரை, சென்னை 600115. (அலுவலக தொலைபேசி எண்.044-24492719 மற்றும் கைபேசி எண்.7904550525, 9894621231) அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று உரிய ஆவணங்களுடன் வருகிற 25-ந்தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். அதிக விண்ணப்பங்கள் பெறப்படின் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்