ஜனநாயக முறையில் போராடிய இடைநிலை ஆசிரியர்கள் பலவந்தமாக கைது - எச்.ராஜா கண்டனம்

காலதாமதம் செய்யாமல் இடைநிலை ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-29 14:18 IST

சென்னை,

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி அறவழியில் ஜனநாயக முறையில் போராடிய இடைநிலை ஆசிரியர்களை பலவந்தமாக கைது செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை கடந்த நான்கரை ஆண்டுகளாக நிறைவேற்றாமல் இழுத்தடித்து இடைநிலை ஆசிரியர்களை ஏமாற்றிய காரணத்தால் வேறு வழியில்லாமல் இடைநிலை ஆசிரியர்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

திமுக அரசு உடனடியாக கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டும். மேலும் காலதாமதம் செய்யாமல் அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

இவ்விஷயத்தில் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் அதற்காக அவர்கள் முன்னெடுத்துள்ள அறவழி ஜனநாயக போராட்டத்திற்கும் பாரதிய ஜனதா கட்சி ஆதரவு அளிக்கிறது.

திமுக அரசு இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் 2026 ல் அமையவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசு இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்