நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் கடந்த 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ஜமாபந்தி நடந்தது. இதில் தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்கள் பட்டா மாறுதல், பெயர் திருத்தம், சாதி சான்று, வருமான சான்று, பிறப்பு-இறப்பு சான்று, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், குறைகள் தொடர்பாக மனு அளித்தனர். மொத்தம் 450-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
இதில் 50 மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த விழாவில் 50 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தர்மபுரி உதவி கலெக்டர் கீதாராணி வழங்கினார். இதில் தாசில்தார் ஆறுமுகம், துணை தாசில்தார்கள் பாலகிருஷ்ணன், சுதாகர், தனி தாசில்தார் லட்சுமி மற்றும் ஈஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.