போடி அருகே கொட்டக்குடியில் மலைவாழ் மக்களுக்கான குறைதீர்க்கும் முகாம்

போடி அருகே கொட்டக்குடியில் மலைவாழ் மக்களுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

Update: 2022-08-10 16:14 GMT

போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொட்டக்குடி ஊராட்சி பகுதியில் மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் மலைவாழ் மக்களுக்கான குறைதீர்க்கும் முகாம், கொட்டக்குடியில் இன்று நடைபெற்றது.

இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, பிற்படுத்தப்பட்டோர் நலப்பிரிவு அலுவலர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போடி தாசில்தார் செந்தில்முருகன் வரவேற்றார். கொட்டக்குடி ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டு, மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.

அதன்படி, 74 மனுக்கள் வரபெற்றது. அதில் 33 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு ஒருவாரத்தில் தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அதிகாரிகள் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்