குறைதீர்க்கும் முகாம்

துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் இன்று குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.;

Update:2023-04-08 00:15 IST

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, மற்றும் மானாமதுரை ஆகிய ஊர்களில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் நடைபெறும் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது புகார்களுக்கு தீர்வு காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்