போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.;

Update:2023-08-23 23:59 IST

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடந்தது. போலீஸ் நிலையங்களில் அளித்த புகார் மனுவுக்கு முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர் 10 பேர் நேரில் வரவழைக்கப்பட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் 30 பேர் புதிதாக புகார் மனு அளித்தனர்.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் புஷ்பராஜன், முத்துமாணிக்கம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில், சரவணன், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்