முதல் இரவில் மனைவியை கடித்து துன்புறுத்திய புதுமாப்பிள்ளை கைது

முதல் இரவில் மனைவியை கடித்து துன்புறுத்திய புதுமாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-30 20:44 GMT

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் தொழுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 34). கூலித் தொழிலாளி. இவருக்கும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் கடந்த 27-ந் தேதி திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த அன்று ராஜ்குமார் வீட்டில் முதலிரவு நடந்தது. அப்போது, இல்லற கனவுகளுடன் சென்ற புதுப்பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ராஜ்குமார் முதலிரவு அறையில் தனது மனைவியிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். அவரை உடலில் பல இடங்களில் கடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த புதுப்பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளர். உடனே புதுமாப்பிள்ளை, மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்தார்.

கைது

ராஜ்குமாரின் இந்த வெறித்தனமான செயலால் காயம் அடைந்த அந்த பெண் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ராஜ்குமார் மீது புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் பேரில், முதல் இரவில் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியும், கடித்தும், தாக்கியும், கொலை மிரட்டல் விடுத்ததாக ராஜ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலிரவு அறையில் கணவனால் புதுப்பெண் தாக்கி துன்புறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்