மதுரையில் கின்னஸ் சாதனை முயற்சி - 10 கி.மீ. தூரம் சிலம்பம் சுற்றியவாறு நடந்து சென்ற மாணவ, மாணவியர்

சுமார் 10 கி.மீ. தூரம் சிலம்பம் சுற்றியவாறே நடந்து சென்று கின்னஸ் உலக சாதனை முயற்சி கொள்ளப்பட்டது.;

Update:2023-05-08 01:59 IST

மதுரை,

மதுரை மாவட்டம் பரவையில் கின்னஸ் உலக சாதனைக்காக மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றியவாறு நடந்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 200 இளம் சிலம்பக்கலை வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

பரவை முதல் பொதும்பு வரை சுமார் 10 கி.மீ. தூரம் சிலம்பம் சுற்றியவாறே நடந்து சென்று கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் இளம் சிலம்ப வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, சாதனை முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்