திருட்டுப்போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

திருட்டுப்போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2023-04-14 19:27 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டையில் செல்போன்கள் திருட்டு போனதாகவும், தொலைந்து போனதாகவும் குற்றப்பிரிவு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதனையடுத்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியா பாய் தீவிர நடவடிக்கையால் திருட்டு போன மற்றும் தொலைந்து போன செல்போன்களில் உள்ள ஐ.எம்.இ. நம்பரை வைத்து செல்போன்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. டவுன் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சப் -இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தவமணி ஆகியோர் மீட்கப்பட்ட 150 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்