அவசரமா தோண்டி...அப்படியே விட்டால் எப்படி...?

அவசரமா தோண்டி...அப்படியே விட்டால் எப்படி...?;

Update:2022-07-13 18:35 IST

சரவணம்பட்டி

கோவையை அடுத்த எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் 350 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சத்துணவு கூடம் அமைப்பதற்கு எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் இருந்து ரூ.5.30 லட்சத்திற்கு டென்டர்கள் விடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சத்துணவு கூடம் அமைப்பதற்கு கடந்த மாதம் குழிகள் தோண்டப்பட்டது. இந்த குழிகள் தோண்டப்பட்ட நிலையிலேயே பணிகள் நிறுத்தப்பட்டு தற்போது வரை கட்டிடம் எதுவும் கட்டப்படாமல் உள்ளது. தற்போது பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்கள் வந்து செல்வதால் மாணவர்கள் அந்த குழிகளில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து பள்ளியின் பெற்றோர், ஆசிரியர் சங்கத்தினரிடம் கேட்டபோது அவர்கூறியதாவது:- இதுகுறித்து ஒன்றிய, வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரரிடம் தொடர்பு கொண்டு சமுதாய கூடத்தை விரைவில் கட்டி முடித்து தர கோரிக்கை வைக்கப்பட்டும் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது கவலை அளிக்கிறது. இதற்கு பின்பு தொடங்கப்பட்ட சமுதாயக்கூட கட்டிடங்கள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு அந்தந்த பள்ளியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனால் சரவணம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு கூடம் அமைக்க பணிகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில் உள்ளது. ஆனால் அதற்காக தோண்டப்பட்ட குழிகள் கிடப்பி லே உள்ளது. ஆகவே இந்த குழிகளில் மாணவர்கள் விழுந்து ஏதேனும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். சத்துணவு கூட கட்டிடபணிக்காக, அவசரமா தோண்டி...அப்படியே விட்டால் எப்படி...? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்