பஸ் வசதி வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

பஸ் வசதி வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2022-12-05 01:00 IST

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஏராளமான பொதுமக்கள் திங்கட்கிழமைகளில் அாியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் ஜெயங்கொண்டத்தில் இருந்து அரியலூர் செல்ல காலை நேரங்களில் சரியாக பஸ் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள், அலுவலகத்திற்கு செல்லும் பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்