தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வெயில் தாக்கம் அதிகரித்து உள்ளது. பல நாட்கள் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திர காலம் முடிவடைந்து சில வாரங்கள் ஆன நிலையில் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறையவில்லை. நேற்று மாவட்டத்தில் வெயில் தாக்கம் மேலும் அதிகரித்தது. பகல் மற்றும் பிற்பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்தது. நேற்று மாவட்டத்தில் 100.7 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பகல் நேரத்தில் சாலைகளில் பொது மக்கள் நடமாட்டம் வழக்கத்தை விட குறைந்தது.