நாமக்கல்லில் கொட்டித்தீர்த்த கனமழை

நாமக்கல்லில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் ஓடியது.;

Update:2023-09-13 00:08 IST

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நாமக்கல் நகரை பொறுத்த வரையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் பொதுமக்களை சுட்டெரித்தது. மாலை 5 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்ததால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்க்க முடிந்தது.

வாகன ஓட்டிகள் மஞ்சள் விளக்கை எரியவிட்டவாறு ஆமை வேகத்தில் வாகனத்தை ஓட்டி சென்றனர். பஸ் பயணிகளும், பொதுமக்களும் குடைபிடித்தவாறு செல்வதை காண முடிந்தது. இந்த மழையின் காரணமாக இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்