கொட்டாம்பட்டி,
மேலூர் பகுதியில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. மேலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அழகர்கோவில், கிடாரிப்பட்டி, தெற்குதெரு, நாவினிப்பட்டி, எட்டிமங்கலம், திருவாதவூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் கன மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.