சிவகங்கை
சிவகங்கையில் நேற்று காலை வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது. வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 8 மணிக்கு மேல் திடீரென மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. பகல் முழுவதும் வெயில் கொளுத்திய நிலையில் இரவு மழை பெய்ததால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.