ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்

செஞ்சியில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;

Update:2023-09-11 00:15 IST

செஞ்சி,

செஞ்சி போக்குவரத்து போலீசார் மற்றும் ராயல் மெக்கானிக் சங்கம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரை அருகே நடைபெற்றது. இதற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார். செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவினா கலந்துகொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அப்போது இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் இன்றி வாகனம் ஓட்டக்கூடாது, விபத்துகளை தவிர்க்க சாலை விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பலர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனி, போலீஸ்காரர்கள் சராசந்த், காத்தவராயன் மற்றும் ராயல் மெக்கானிக் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்