அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது;

Update:2023-03-04 17:44 IST

அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது

திருப்பத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டம் மூலமாக அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பெ.சீனுவாசகுமரன் தலைமை தாங்கினார்.

இதில் கல்லூரியை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு உயர்கல்வி பற்றி அறிந்து பயனடைந்துள்ளனர். நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்களும் கலந்து கொண்டு துறையினை பற்றியும், அதன் வேலைவாய்ப்பு பற்றியும் எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியினை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப. நரசிம்மன் ஏற்பாடு செய்திருந்தார்.=========

Tags:    

மேலும் செய்திகள்