இந்து முன்னணி செயற்குழு கூட்டம்
களக்காட்டில் இந்து முன்னணி செயற்குழு கூட்டம் நடந்தது.;
களக்காடு:
களக்காடு ஒன்றிய இந்து முன்னணி செயற்குழு கூட்டம் நடுச்சாலைபுதூர் நாராயணசுவாமி கோவிலில் நடைபெற்றது. கோட்டதலைவர் தங்கமனோகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வைத்தியநாதன், களக்காடு ஒன்றிய செயலாளர் சிதம்பரம், துணைத்தலைவர் வைகுண்ட ராஜா, ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் அரவிந்த், அருண், அன்னபாண்டி, விக்னேஷ், ராஜ்குமார், நாராயணன், சண்முகராஜா, வள்ளியூர் ஒன்றிய செயலாளர் ஜெயகிருஷ்ணன், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.