இந்து முன்னணி கொடியேற்று விழா

கொம்மடிக்கோட்டையில் இந்து முன்னணி கொடியேற்று விழா நடந்தது.;

Update:2023-07-23 00:15 IST

தட்டார்மடம்:

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சாத்தான்குளம் ஒன்றியம் கொம்மடிக்கோட்டையில் இந்து முன்னணி கொடியேற்று விழா மற்றும் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய பொருளாளர் ஐயப்பன் முத்து முன்னிலை வகித்தார். ஒன்றிய துணைத் தலைவர் சீனிவாசன் வரவேற்றார். நிகழ்ச்சியில் இந்து முன்னணி பேச்சாளர் லிங்கதுரை, இந்து முன்னணி ஒன்றிய துணைத் தலைவர் இசக்கிமுத்து மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன் முத்துப்பாண்டி கொடியேற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்