இந்து முன்னணி பொதுக்கூட்டம்

தூத்துக்குடியில் இந்து முன்னணி பொதுக்கூட்டம் நடந்தது.;

Update:2022-12-11 00:15 IST

தூத்துக்குடி மடத்தூர் பத்ரகாளி அம்மன் கோவிலில் நேற்று இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி மடத்தூரில் அரசுக்கு சொந்தமான பள்ளி விளையாட்டு மைதானத்தின் நிலத்தில் கட்டப்பட்டுள்ள சர்ச் மீது உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் கூட்டத்தில் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் இந்து மதத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கூட்டத்தில் இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கிமுத்துக்குமார், ராஜவேல் நாராயண ராஜ், சரவணகுமார், பலவேசம், சிபு சுடலை, ஆறுமுகம் சுடலைமணி மற்றும் மடத்தூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்