மங்கலம்பேட்டையில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மங்கலம்பேட்டையில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-09-11 16:38 GMT

விருத்தாசலம், 

இந்துக்களின் கடவுளான விநாயகர் குறித்து அவதூறாக பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனை கண்டித்து இந்து முன்னணி சார்பில், மங்கலம்பேட்டை தேரடி வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய துணைத் தலைவர் விக்னேஷ் தலைமை தாங்கினார். குணசேகரன், விக்கி, நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் மணிகண்டன் கலந்து கொண்டு விநாயகரை அவதூறாக பேசிய முத்தரசனை கண்டித்து கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் செந்தில், சக்திவேல், சண்முகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்