காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Update: 2022-11-26 18:45 GMT

பென்னாகரம்:

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான நாட்ராம்பாளையம், அஞ்செட்டி, கேரட்டி, கெம்பாகரை, பிலிகுண்டுலு, ராசிமணல், மொசல்மடுவு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்தது. இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்த நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன்படி நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதாக உள்ளதால் பிலுகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்