வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம்;கணவன்- மனைவி கைது

வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்த கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-07-16 00:15 IST

அன்னதானப்பட்டி

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதிகளில் விபசாரம் நடப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் ரோந்து சென்ற போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமையன்காடு பகுதியில் சிலர் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக பாலசுப்பிரமணியம் (வயது 54), அவருடைய மனைவி செல்வி (45) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அங்கிருந்து 45 வயதுடைய ஒரு பெண் மீட்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்