மதுவிற்ற கணவன்-மனைவி கைது

வந்தவாசியில் மதுவிற்ற கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-08-20 22:20 IST

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் வந்தவாசி-திண்டிவனம் சாலையில் வந்தவாசி தெற்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளை மடக்கி அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் வந்தவாசி திண்டிவனம் சாலையைக் சேர்ந்த தேவேந்திரன் (வயது 47) என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்தனர்.

மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 47 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரது வீட்டில் சோதனை செய்தபோது அவரது மனைவி சைதானி (44) என்பவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். வீட்டில் பதுக்கி வைத்திருந்த 120 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் சைதானியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

தேவேந்திரன் இதய நோயாளி என்பதால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்