கடலூரில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா

கடலூரில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-07-18 18:45 GMT

70 வயது பூர்த்தியான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும். அகவிலைப்படி உயர்வை ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் கருணாகரன், சிவப்பிரகாசம், கலியமூர்த்தி, ஞானமணி, ராமானுஜம், சிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் பாலு.பச்சையப்பன் வரவேற்றார். போராட்டத்தை மாநில துணை தலைவர் நடராஜன் தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட செயலாளர் பழனி. ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் வேளாண்மை துறை ஓய்வூதியர் சங்க மாநில துணை தலைவர் சண்முகம், குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் தேவராஜ், அகில பாரத மூத்த குடிமக்கள் பென்சனர் கூட்டமைப்பு தலைவர் ராமசாமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில செயலாளர் மனோகரன் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் குழந்தைவேலு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்