கோபி நகராட்சி பகுதியில் கட்டிட பணிகளை மண்டல இயக்குனர் ஆய்வு

கோபி நகராட்சி பகுதியில் கட்டிட பணிகளை மண்டல இயக்குனர் ஆய்வு செய்தாா்.;

Update:2023-09-10 04:11 IST

கடத்தூர்

கோபி நகராட்சி பகுதியில் புதிய தினசரி மார்க்கெட் வளாகம், மொடச்சூர் வாரச்சந்தை கடைகள், அறிவு சார் மையம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் இளங்கோவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் சாய் அபிராமி நகர், அழகு நகர், ராம் நகர் மற்றும் அப்துல்கலாம் நகர் ஆகிய இடங்களில் போடப்பட்ட புதிய தார் சாலைகளையும் ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்