காமயகவுண்டன்பட்டியில் சமுதாய நலக்கூடம் பயன்பாட்டிற்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கம்பம் அருகே சமுதாய நலக்கூடம் பயன்பாட்டிற்கு வருமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்;

Update:2022-08-19 18:53 IST

கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 2010-ம் ஆண்டு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 12 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் கட்டிடம் பாழடைந்து போகும் நிலை உள்ளது. எனவே சமுதாய நலக்கூடம் பயன்பாட்டிற்கு வருமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர். கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் வாஸ்து சரி இல்லை என கூறி கட்டிடத்தை திறக்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர் என்று பொதுமக்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்