மயான வனகாளியம்மன் கோவிலில் தசரா பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு

மயான வனகாளியம்மன் கோவிலில் தசரா பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு நடத்தினர்.;

Update:2023-10-17 00:15 IST

கயத்தாறு:

கயத்தாறில் தெற்கு சுப்பிரமணியபுரம் மயான வன காளியம்மன் கோவிலில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மனுக்கு மாலை அணிவித்து கொடைவிழா நடத்தி வருகின்றனர். இவ்விழாவை முன்னிட்டு வன காளியம்மன் கோவிலில் தசரா குழுவினர் பல்வேறு பூஜைகள் நடத்தி பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் காளி, கருப்பசாமி உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து தசரா குழுவினர் பூக்குழி இறங்கினர். இந்த வகையில் 31 பேர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்