புஞ்சைபுளியம்பட்டியில்கார் மோதி நர்சு பலி

புஞ்சைபுளியம்பட்டியில் கார் மோதி நர்சு பலியானாா்;

Update:2023-10-01 01:15 IST

புஞ்சைபுளியம்பட்டியில் கார் மோதி நர்சு பரிதாபமாக இறந்தார்.

நர்சு

புஞ்சைபுளியம்பட்டி மறைமலை அடிகள் வீதியைச் சேர்ந்தவர் பிரியா என்கின்ற அனிஷா பேகம் (வயது 46). இவர் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பர்கத்துல்லா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மகன்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் பிரியா நேற்று முன்தினம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலம் சென்றுவிட்டு புஞ்சைபுளியம்பட்டி அய்யப்பன் கோவில் அருகே வேனில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

கார் மோதி பலி

சத்தியமங்கலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக பிரியா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விபத்தை ஏற்படுத்தியதாக காரை ஓட்டி வந்த மோகன்ராஜ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்