தருவைகுளததில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

தருவைகுளததில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2023-08-07 00:15 IST

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் வான்படைகளின் தளபதி அதிதூதர் மிக்கேல் ஆலய பங்கு மக்கள் சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நேற்று ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஊர்வலத்துக்கு உதவி பங்குதந்தை சஜன் தலைமை தாங்கினார். பங்குதந்தை வின்சென்ட் முன்னிலை வகித்தார். ஆலயம் முன்பு இருந்து தொடங்கிய ஊர்வலம் கொடிமர வீதி, குருசடி வீதி, பஸ் நிலையம், கெபி வீதி வழியாக மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது. ஊர்வலத்தில் சென்றவர்கள் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோரிக்கை அட்டைகளை கைகளில் ஏந்திவாறு கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். பின்னர் ஆலயம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஊர் நிர்வாகி மகாராஜன், தூத்துக்குடி மறைமாவட்ட பல்நோக்கு பணியக செயலர் சசிகலா மற்றும் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனா

Tags:    

மேலும் செய்திகள்