ஆண்டிப்பட்டியில் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை

ஆண்டிப்பட்டியில் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

Update: 2022-11-24 18:45 GMT

ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு தமிழக அரசின் வீடு தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. முகாமை ஆண்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா தொடங்கி வைத்தார். முகாமில் ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் பணியாற்றும் 120 துப்புரவு பணியாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனை டாக்டர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை செய்து பாதிப்பிற்கான சிகிச்சை மற்றும் மருந்துகளை வழங்கினர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஆண்டிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன், சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்