விளாத்திகுளம், எட்டயபுரம் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா

விளாத்திகுளம், எட்டயபுரம் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழாகொண்டாடப்பட்டது.

Update: 2023-08-09 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா கொண்டாப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு கோவிலில் சண்முகருக்கு பால், சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய், திருநீறு, இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ெசய்தனர்.

இதேபோல் எட்டயபுரம் நடுவிற்பட்டி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்