இளம் பெரியார் உதயநிதி ஸ்டாலின்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

இளம் பெரியார் உதயநிதி ஸ்டாலின் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.;

Update:2025-12-14 18:52 IST

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என தொடர்ந்து நான்காம் தலைமுறையாக திராவிட மாடல் நாயகர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்கி வருகிறார். திராவிட இயக்கத்தை அடுத்த 50 ஆண்டுகாலம் நகர்த்திச் செல்ல இருக்கிறவர் நம் 5ஆவது தலைமுறை தளபதி உதயநிதி ஸ்டாலின்.

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்தநாளன்று கருப்பு உடை அணிந்திருந்தார். நாங்களெல்லாம் பூரித்துப்போனோம். அப்படிப்பட்ட 'இளம் பெரியார்' உதயநிதியை தந்ததற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. வருகிற சட்டமன்ர தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்