கோவையில் பா.ஜ.க. சார்பில் நடத்தப்பட்ட பைக் ரேஸ் - சீறிப்பாய்ந்த வீரர்கள்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பைக் ரேசில் கலந்து கொண்டனர்.;
கோவை,
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் பா.ஜ.க. சார்பில் தேசிய அளவிலான ஆப் ரோடு பைக் ரேஸ் நடத்தப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இந்த பைக் ரேசில் கலந்து கொண்டனர்.
பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இந்த பைக் ரேஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மூன்றரை லட்சம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. பந்தயத்தில் சீறிப்பாய்ந்த வாகனங்களை பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.