தூத்துக்குடியில் சரள்மண் கடத்தியலாரி டிரைவர் சிக்கினார்

தூத்துக்குடியில் சரள்மண் கடத்திய லாரி டிரைவர் கைதுசெய்யப்பட்டார்.;

Update:2023-07-31 00:15 IST

தட்டப்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷகிலா ஷானி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பேரூரணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் உரிய அனுமதி இன்றி சரள் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவர் அருப்புகோட்டை கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயகண்ணன் (45) என்பவரை கைது செய்தனர். மேலும் மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, 6 யூனிட் சரள் மண் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்