இந்தோ-அமெரிக்கன் பள்ளியில் நிறுவனர் உருவச்சிலை திறப்பு விழா

செய்யாறு இந்தோ-அமெரிக்கன் பள்ளியில் பள்ளி நிறுவனர் ராமதாஸ் உருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.;

Update:2023-06-04 18:25 IST

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு இந்தோ-அமெரிக்கன் பள்ளி வளாகத்தில் பள்ளியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அப்பாயின் உருவச்சிலை திறப்பு விழா நடந்தது. அப்பாய் அறக்கட்டளை இயக்குனர் ராஜமன்னார் அப்பாய் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், டாக்டர் சந்திரராஜா அப்பாய், டாக்டர் ஸ்ரீதேவி, அனிகா பிரியா கேசவலு, சென்னை அண்ணா நகர் தொகுதி எம்.எல்.ஏ. மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சையத் அப்துல் லியாஸ் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் கலந்துகொண்டு உருவச்சிலையை திறந்து வைத்து பேசுகையில், அன்பு, அடக்கம், பண்பு, பாசம் தான் மனிதனை உயர்ந்த மனிதனாக்கும். பணம், பதவி, செல்வம் எதுவும் நிலையானது அல்ல. மற்றவர்களுக்கு உதவிட வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களை எல்லோரும் மதிப்போடு கையெடுத்து கும்பிடுகின்றனர். நான் எனது என்ற எண்ணம் கொள்ளாமல் நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவிட வேண்டும்' என்றார்.

தொடர்ந்து அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனையடுத்து 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்த பள்ளி மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. முடிவில் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் சுதா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்