இந்து முன்னணி அலுவலகம் திறப்பு விழா

முக்கூடலில் இந்து முன்னணி அலுவலகம் திறப்பு விழா நடந்தது.;

Update:2023-03-07 01:36 IST

முக்கூடல்:

முக்கூடல் கீழப்பெரிய வீதியில் இந்து முன்னணி அலுவலகம் திறப்பு விழா நடந்தது. பா.ஜ.க. மக்கள் நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் மீனாட்சி சுப்பிரமணியன் தலைமை தாங்கி, புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்து முன்னணி நெல்லை புறநகர் மாவட்ட துணைத்தலைவர் பால்ராஜ், செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், பா.ஜ.க. ஒன்றிய தலைவர் முருகன், பாப்பாக்குடி ஒன்றிய இந்து முன்னணி தலைவர் இசை ரஞ்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்