காசநோய் கண்டறியும் நவீன பரிசோதனை மையம் திறப்பு விழா

ஆரணி அரசு மருத்துவமனையில் காசநோய் கண்டறியும் நவீன பரிசோதனை மையம் திறப்பு விழா நடந்தது.;

Update:2023-06-09 17:48 IST

ஆரணி

ஆரணி அரசு மருத்துவமனையில் காசநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் சி.பி. நாட் என்ற நவீன பரிசோதனை மையம் அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மமதா தலைமையில் நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காசநோய் துணை இயக்குனர் அசோக் கலந்து கொண்டு காசநோய் கண்டறியும் புதிய மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

இதுகுறித்து காசநோய் இயக்குனர் அசோக் கூறுகையில், இந்த கருவியின் மூலம் காசநோய் கிருமிகள் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலே கண்டறிய முடியும்.

மேலும் காசநோய் மருந்துக்கு கட்டுப்படாத வீரியமிக்க கிருமிகள் இருந்தால் அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். நவீன கருவியின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் ஆகும்.

இந்த பரிசோதனை தனியார் மருத்துவமனைகளில் ரூ.2 ஆயிரம் செலவாகும். இது ஆரணி அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகிறது என்றார்.

நிகழ்ச்சியில் ஏற்கனவே தொடர் சிகிச்சையில் இருந்து வரும் காச நோயாளிகள் 20 பேருக்கு தொழிலதிபர்கள் ஜெகதீசன், கமலக்கண்ணன் ஆகியோர் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கினார்கள்.

விழாவில் டாக்டர்கள், தலைமை செவிலியர் டார்த்தி மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆய்வக நுட்புநர் எம்.கருணாகரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்