தனியார் பஸ் கவிழ்ந்து 7 பயணிகள் காயம்

Update:2023-07-25 01:00 IST

தர்மபுரி:

சேலத்தில் இருந்து அரூருக்கு நேற்று ஒரு தனியார் பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் காளிபேட்டை அருகே வந்தபோது சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பஸ்சில் சென்ற 7 பயணிகள் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்