மேல்சாத்தம்பூர், இருட்டனை கிராமங்களில் உழவர்நலத்துறை திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு

மேல்சாத்தம்பூர், இருட்டனை கிராமங்களில் உழவர்நலத்துறை திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு

Update: 2022-08-14 13:21 GMT

பரமத்திவேலூர்:

பரமத்தி அருகே மேல்சாத்தம்பூர், இருட்டனை உள்ளிட்ட கிராமங்களில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை சென்னை விதைசான்று மற்றும் அங்கக சான்றளிப்பு துறை வேளாண்மை இணை இயக்குநர் அசீர் கனகராஜன் ஆய்வு செய்தார். மேல்சாத்தம்பூரில் 2021-22-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செய்த திட்டப்பணிகளை பார்வையிட்ட அவர், பண்ணைக் கருவிகள், தென்னங்கன்றுகள், கைத்தெளிப்பான்கள், தார்ப்பாய்கள் வினியோகம் குறித்து மேல்சாத்தம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். மேலும் தோட்டக்கலை துறையின் சார்பில் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.

இருட்டனை கிராமத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலத்தொகுப்பு திட்டப்பணிகள் குறித்து விவசாயிகளிடம் கலந்தாய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது நாமக்கல் வேளாண்மை இணை இயக்குனர் அசோகன், வேளாண்மை துணை இயக்குனர்கள் ராஜகோபால் (மாநில திட்டம்) மற்றும் முருகன், (மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்), பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி, தோட்டக்லைத்துறை உதவி இயக்குனர் தமிழ்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்