வளர்ச்சித் திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

அணைக்கட்டு ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா ஆய்வு செய்தார்.;

Update:2023-08-31 22:58 IST

கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வேலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் லட்சுமி பிரியா நேற்று அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பீஞ்ச மந்தை, உனை மற்றும் கங்கநல்லூர் ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை ஆய்ரு செய்தார்.

அப்போது பீஞ்சமந்தை ஊராட்சியில் உள்ள குழந்தைகள் மையத்தை பார்வையிட்டு, உணவுகள் குறித்து ஆய்வு செய்தார். மையத்தில் ஒரு குழந்தைக்கு லேசான காய்ச்சல் இருப்பதை கவனித்த அவர் துணை இயக்குனரை, உடனடியாக குழந்தையை பரிசோதித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினார். பெரிய எட்டிப்பட்டு கிராமத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை பார்வையிட்டார்.

கலந்துரையாடினார்

தொடர்ந்து தொங்குமலை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு அட்டவணையில் உள்ளபடி உணவு வகைகள் வழங்கப்படுகிறதா என மாணவர்களிடம் கேட்டறிந்தார். பீஞ்ச மந்தை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிக்கு சென்று மாணவ- மாணவிகளிடம் பாடத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்.

மேலும் பீஞ்சமந்தை ஊராட்சியில் ரூ.136 கோடியில் கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிட நல மாணவியர் விடுதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற்பொறியாளர் செந்தில் வேல், வருவாய் கோட்டாட்சியர் கவிதா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுஜாதா, அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்