ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது...! பயணிகளுக்கு ரெயில்வே முக்கிய அறிவிப்பு...!

கிட்டத்தட்ட 300 முடக்கம் குறித்த அறிக்கைகள் நிகழ்நேர செயலிழப்புகளைக் கண்காணிக்கும் இணையதளமான Downdetector.in பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-07-25 05:35 GMT

சென்னை

ரெயில்வே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய பயணிகள் ஐஆர் சிடிசி என்ற செயலியை பயன்படுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த செயலியை பயன்படுத்தி முன் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஐஆர்சிடிசி இணையதளம் திடீரென முடங்கியதால் பயணிகள் டிக்கெட் முன் பதிவு செய்ய முடியாமல் அவதியடைந்துள்ளனர்.

தட்கல் முன்பதிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களோடு நேரம் முரண்படுகிறது. ஏசி வகுப்பிற்கான தட்கல் முன்பதிவு (2A/3A/CC/EC/3E) காலை 10:00 மணிக்கும், ஏசி அல்லாத வகுப்பிற்கு (SL/FC/2S) காலை 11:00 மணிக்கும் தொடங்குகிறது.

இதுவரை, கிட்டத்தட்ட 300 முடக்கம் குறித்த அறிக்கைகள் நிகழ்நேர செயலிழப்புகளைக் கண்காணிக்கும் இணையதளமான Downdetector.in பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இணையதளம் மற்றும் செயலியில் பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் இந்த முடக்கம் நிகழ்ந்துள்ளது. பயணச்சீட்டுகளை முன் பதிவு செய்ய Ask Disha என்ற செயலியை பயன்படுத்துமாறு ஐஆர்சிடிசி அறிவுறுத்தியுள்ளது.

ஐஆர்சிடிசி வெளியிட்டு உள்ள டுவீட்டில், "தொழில்நுட்ப காரணங்களால் டிக்கெட் சேவை கிடைக்கவில்லை. எங்கள் தொழில்நுட்பக் குழு சிக்கலை சரி செய்து வருகிறது. தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டதும் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்