இரும்பு தகடு திருடியவர் கைது
நெல்லை மேலப்பாளையத்தில் இரும்பு தகடு திருடியவரை போலீசார் கைது செய்தனர்.;
நெல்லை மேலப்பாளையம் சப்பாணி அலிம் தெருவில் சென்ட்ரிங் வேலையை காண்ட்ராக்ட் எடுத்து செய்து வரும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மதியழகன் (வயது 26) என்பவருக்கு சொந்தமான இரும்பு தகடுகள் கடந்த 13-ந் தேதி காணாமல் போனதாக அவர் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மேலப்பாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (40) என்பவர் திருடியது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 9 இரும்பு தகடுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.