இஸ்ரோ செயற்கைக்கோள் அறிவியல் கண்காட்சி

ஜோலார்பேட்டையில் இஸ்ரோ செயற்கைக்கோள் அறிவியல் கண்காட்சியை கலெக்டர் தொடங்கிவைத்தார்.;

Update:2023-09-14 23:55 IST

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பெங்களூருவில் செயல்படும் இஸ்ரோ செயற்கைக்கோள் பிரிவின் யு.ஆர்.ராவ் சாட்டிலைட் மையம் மூலம் சந்திராயன்-3 உள்ளிட்ட செயற்கைக்கோள்கள் மாதிரி அடங்கிய சிறப்பு அறிவியல் கண்காட்சி பஸ் வரவழைக்கப்பட்டு கண்காட்சி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசுப்புராயன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் வெங்கடேச பெருமாள், அமுதா, மெட்ரிக் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி, பள்ளியின் நிர்வாக இயக்குனர் எம்.சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் எஸ்.தீபா சிவப்பிரகாசம் வரவேற்றார்.

இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், பெங்களூரு இஸ்ரோ விஞ்ஞானி எச்.எல்.சீனிவாசா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஐ.ஆஜம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், 38 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்