தாய், மகனை வெட்டிய 2 பேருக்கு சிறை தண்டனை

பத்தமடை அருகே தாய், மகனை வெட்டிய 2 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;

Update:2023-08-01 01:04 IST

பத்தமடை அருகே உள்ள உப்பூரணி தெற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணி துரைராஜ் (வயது 39). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஜான்சன் என்பவருக்கும் வயலில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ந் தேதி இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஜான்சன் (40) மற்றும் அவருடைய தந்தை பவுல் (70) ஆகிய இருவரும் சேர்ந்து அந்தோணி துரைராஜ் மற்றும் அவருடைய தாய் அருமை தாய் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டினார்கள். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட மகிளா கோட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி விஜயகுமார் வழக்கை விசாரித்து ஜான்சன் மற்றும் பவுல் ஆகியோருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ஜான்சனுக்கு ரூ.25 ஆயிரம், பவுலுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் ஜெயா பிரபா ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்